49 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் ஆகும் ‘காசேதான் கடவுளடா’ படம் - ஹீரோ யார் தெரியுமா?
| | |

49 ஆண்டுகளுக்கு பின் ரீமேக் ஆகும் ‘காசேதான் கடவுளடா’ படம் – ஹீரோ யார் தெரியுமா?

Spread the love

தமிழில் ஏற்கனவே வெற்றி பெற்ற படங்களை ரீமேக்  செய்வது தற்போது நடந்து வருகிறது. அப்படி ரீமேக் செய்யப்படும் படங்கள் வெற்றியும் பெற்றுள்ளது. குறிப்பாக ரஜினிகாந்தின் பில்லா, தில்லு முல்லு, மாப்பிள்ளை, ஜெமினிகணேசனின் நான் அவனில்லை உள்ளிட்ட படங்கள் ரீமேக் ஆகி வெற்றியும் பெற்றுள்ளது. அந்தவரிசையில் தற்போது காசேதான் கடவுளடா படமும் ரீமேக் ஆக உள்ளது. இந்த படம் 1972-ல் திரைக்கு வந்தது. முத்துராமன், தேங்காய் சீனிவாசன், ஶ்ரீகாந்த், வெண்ணிற ஆடை மூர்த்தி, லட்சுமி, மனோரமா நடித்து இருந்தனர். சித்ராலயா கோபு இயக்கி இருந்தார்.   

படத்தில் இடம்பெற்ற ஜம்புலிங்கமே ஜடாதரா, மெல்ல பேசுங்கள், அவள் என்ன நினைத்தாள், இன்று வந்த இந்த மயக்கம், ஆண்டவன் தொடங்கி போன்ற பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் ஒலித்தன. காசேதான் கடவுளடா படத்தின் ரீமேக்கை ஆர்.கண்ணன் இயக்குகிறார். இதில் முத்துராமன் கதாபாத்திரத்தில் சிவா, தேங்காய் சீனிவாசன் கதாபாத்திரத்தில் யோகிபாபு, மனோரமாவாக ஊர்வசி நடிக்கின்றனர்.  

படம் குறித்து ஆர்.கண்ணன் கூறும்போது, “கொரோனா தொற்றால் மக்கள் மன அழுத்தத்தில் இருக்கும் இந்த காலத்தில் ஓ.டி.டி. தளங்களில் அதிகமாக மர்மம், திகில், கிரைம் படங்களே வருகின்றன. மக்களை சிரிக்க வைக்கும் படைப்பாக காசேதான் கடவுளடா படத்தை நவீன காலத்துக்கு ஏற்ப ரீமேக் செய்கிறோம். காசேதான் கடவுளடா படம் எக்காலத்துக்கும் பொருந்தும் கதையமைப்பை கொண்டது’’ என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *