வெளியானது அண்ணாத்த டீசர் வெளியிட்டு தேதி - கொண்டாடும் ரசிகர்கள்!!!
| | | |

வெளியானது அண்ணாத்த படத்தில் டீசர் வெளியிட்டு தேதி – கொண்டாடும் ரசிகர்கள்!!!

Spread the love

முருகதாஸ்இயக்கத்தில்ரஜினிகாந்த் நடித்த தர்பார் படம் கடந்த ஆண்டு வெளியானது. தர்பார் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. அதனை தொடர்ந்து, ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி உள்ள படம் ‘அண்ணாத்த’. விசுவாசம் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பின் சிவா இயக்கி இருக்கும் படம் அண்ணாத்த. எனவே இப்படம் ரசிகர்களிடம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

ரஜினி, நயன்தாரா

அண்ணாத்த படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ள அண்ணாத்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார்.

இப்படம் வருகிற நவம்பர் மாதம் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று ரிலீசாக உள்ளது. எனவே அண்ணாத்த படத்தின் அப்டேட்டுகள் அடுத்தடுத்து வரிசையாக வெளியிடப்பட்டு வருகின்றன. கடந்த வாரம் அண்ணாத்த படத்தின் 2 பாடல்களை படக்குழுவினர் வெளியிட்டனர். இந்த படல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.

இந்நிலையில், அண்ணாத்த படத்தின் டீசரை ஆயுத பூஜையை முன்னிட்டு, அக்டோபர் 14ஆம் தேதி மாலை 6 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர். இதை ரஜினி ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கொண்டாடி வருகிறார்கள்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *