விஜய் சேதுபதியுடன் நேரடியாக மோதும் சந்தானம், அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!
| | | |

விஜய் சேதுபதியுடன் நேரடியாக மோதும் சந்தானம், அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

Spread the love

தமிழ் சினிமாவில் காமெடி நடிகராக வலம் வந்து, தற்போது முன்னணி ஹீரோவாக வலம் வருகிறார் சந்தானம்.

சந்தானம்

சந்தானம் தற்போது மூன்று வேடங்களில் நடித்துள்ள படம் ‘டிக்கிலோனா’. கார்த்திக் யோகி இயக்கியுள்ள இப்படத்தில் சந்தானத்துக்கு ஜோடியாக அனகா மற்றும் ஷிரின் ஆகியோர் நடித்துள்ளார்கள். மேலும் சுழற்பந்துவீச்சாளர் ஹர்பஜன் சிங்கும் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார். 

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதன்படி வருகிற செப்டம்பர் 10-ந் தேதி விநாயகர் சதுர்த்தியன்று இப்படம் நேரடியாக ஜீ5 OTT தளத்தில் வெளியாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நடிகர் சந்தானம் நடித்துள்ள படம் நேரடியாக OTT-யில் வெளியாவது இதுவே முதன்முறை.

அன்றைய தினம் டெல்லி பிரசாத் தீனதயாளன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள துக்ளக் தர்பார் படமும் வெளியிடப்பட உள்ளது. இப்படம் நேரடியாக தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட உள்ளதாக கூறப்படுகிறது. விஜய் சேதுபதி, சந்தானம் நடித்த படங்கள் ஒரே நாளில் ரிலீசாவது இதுவே முதன்முறை.

விஜய் சேதுபதி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *