| | |

விஜய் சேதுபதிக்கு ஜோடியாகும் பிக்பாஸ் புகழ் ஷிவானி நாராயணன்?

Spread the love

மாஸ்டர் படத்தின் வெற்றியைத் தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் புதிய படம் ‘விக்ரம்’. நடிகர் கமல்ஹாசன் ஹீரோவாக நடிக்கும் இப்படத்தில் விஜய் சேதுபதி, பகத் பாசில், நரேன், அர்ஜுன் தாஸ், காளிதாஸ் ஜெயராம் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடிக்கிறது. 

ஷிவானி நாராயணன்

விக்ரம் படத்தை நடிகர் கமல்ஹாசன் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான ராஜ்கமல் பிலிம்ஸ் நிறுவனம் மூலம் தயாரிக்கிறார். அனிருத் இசையமைக்கும் இப்படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார்.

கேரளா சேலையில் விதவிதமாக லுக் விட்டு ரசிகர்களை கிக் ஏற்றும் ஷிவானி

விக்ரம் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இதன் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு காரைக்குடியில் தொடங்க இருக்கிறது. இதில் கமல், விஜய் சேதுபதி சம்பந்தப்பட்ட காட்சிகள் படமாக்கப்பட இருக்கிறார்கள். 

இந்த நிலையில் நடிகை ஷிவானி நாராயணன் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விஐய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பகல் நிலவு என்ற சீரியல் மூலம் நடிகையானவர் ஷிவானி நாராயணன். அதன் பிறகு கடைக்குட்டி சிங்கம், இரட்டை ரோஜா ஆகிய சீரியல்களிலும் ஹீரோயினாக நடித்தார். கடந்தாண்டு நடந்த பிக்பாஸ் 4-வது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டு மிகவும் பிரபலமானார். விரைவில் ஷிவானி நடிப்பது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *