விஜய்யின் 66-வது படத்தின் கதாநாயகி இவரா? மகிழ்ச்சில் ரசிகர்கள்...
| | | |

விஜய்யின் 66-வது படத்தின் கதாநாயகி இவரா? மகிழ்ச்சில் ரசிகர்கள்…

Spread the love

இந்த ஆண்டு தொடக்கத்தில்லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. மேலும் வசூலும் குவித்தது. தொடர்ந்து விஜய் நடிக்கும்சி 65-வது படம் ‘பீஸ்ட்’. நெல்சன் இயக்கத்தில் உருவாகும் இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க்கிறார். வில்லனாக செல்வராகவன் நடிக்கின்றனர் மற்றும் அனிருத் இப்படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

விஜய்

இந்நிலையில், விஜய்யின் 66-வது படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் திடீரென்று வெளியானது. அதன்படி இப்படத்தை பிரபல தெலுங்கு இயக்குனர் வம்சி பைடி பல்லி இயக்க உள்ளதாக அறிவித்துள்ளனர். இவர் ஏற்கனவே தமிழில் கார்த்தி மற்றும் நாகார்ஜுனா நடித்த தோழா படத்தை இயக்கி உள்ளார். 

வம்சி பைடி பல்லி, தில் ராஜு மற்றும் விஜய்

‘தளபதி 66’ படத்தை வெங்கடேஷ்வரா கிரியேசன்ஸ் சார்பாக பிரபல தெலுங்கு தயாரிப்பாளர் தில் ராஜு தயாரிக்கிறார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் தயாராக உள்ளது.  இந்நிலையில், இப்படத்தில் கதாநாயகி கீர்த்தி சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது, மேலும் இவருடன் இன்னொரு கதாநாயகியும் இப்படத்தில் நடிக்கலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. 

கீர்த்தி சுரேஷ் மற்றும் விஜய்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *