விஜயுடன் தான் என்னுடைய காதல் - ராஷ்மிகா
| | |

விஜயுடன் தான் என்னுடைய காதல் – ராஷ்மிகா

Spread the love

கன்னடம் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம்வரும் ராஷ்மிகா, கீதா கோவிந்தம் திரைப்படத்தின் மூலம் தெலுங்கு தாண்டி தமிழ் ரசிகர்களிடமும் மிகவும் பிரபலமடைந்தார். ஒரு கட்டத்திற்கு பிறகு ராஷ்மிகா எப்போது தமிழ் சினிமாவில் நடிப்பார் என அனைவரும் எதிர்பார்த்திருந்தனர். சமீபத்தில் வெளியான சுல்தான் படம் மூலம் தமிழில் அறிமுகமானார். சுல்தான் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் ரசிகர்கள் ராஷ்மிகா நடிப்பை கொண்டாடினர்.

இந்நிலையில் ராஷ்மிகா தனது சமூக வலைத்தள பக்கத்தில் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வந்தார். அப்போது, விஜய்யுடன் எப்போது நடிப்பீர்கள்? என்று ரசிகர் ஒருவர் கேட்டக் கேள்விக்கு ‘மிக விரைவில்’ என்று பதிலளித்துள்ளார். மற்றொரு ரசிகர் ‘தளபதியைப் பற்றி ஒரு வார்த்தை சொல்லுங்கள்?’ என்று கேட்டதற்கு “விஜய் என்னுடைய காதல்” என்று பதிலளித்துள்ளார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *