வலிமை படத்தில் சேசிங் காட்சிகள் பற்றிய தகவல்களை வெளியிட்ட இயக்குனர் எச் வினோத்!!!
| | | |

வலிமை படத்தில் சேசிங் காட்சிகள் பற்றிய தகவல்களை வெளியிட்ட இயக்குனர் எச் வினோத்!!!

Spread the love

நேர்கொண்ட பார்வை’ படம் வெற்றிக்கு பின் இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில், அஜித் இரண்டாவது முறையாக நடிக்கும் திரைப்படம் ‘வலிமை’. பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி இந்தப் படத்தில் கதாநாயகியாக நடிக்கிறார். இப்படத்தை மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் கணவரும், தயாரிப்பாளருமான போனி கபூர் தயாரிக்கிறார்.

நான் கேம் ஆரம்பிச்ச்ரொம்ப தல அஜீத், பறக்கவிட ரசிகர்கள். வெளியானது வலிமை Glimpse வீடியோ...
அஜித்

யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங் பணிகளும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல்கள் மற்றும் வீடியோக்களை, படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.சமிபத்தில் டீசர் வெளியாகி வரவேற்பு பெற்றன. 

இந்த படத்தில் பல காட்சிகளில் அஜித் டூப் போடாமல் ஸ்டண்ட் செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து இயக்குனர் வினோத் கூறியிருப்பதாவது, படத்தில் மொத்தம் 3 சேசிங் காட்சிகள் உள்ளன. ஐதராபாத்தில் புதிதாக போடப்பட்டு இன்னும் திறக்காத நெடுஞ்சாலையில் ரேசிங் காட்சிகள் ஷூட்டிங் செய்தோம். ரோடு கல்லும் மண்ணும் ஆக இருந்தது. அப்போது ஒரு டயரில் வீலிங் செய்யும்  காட்சி எடுக்கப்பட்டது, அப்போது டயர் தடுமாறி அஜித் கீழே விழுந்து விட்டார்.

ஹுமா குரேஷி

வேகமாக வந்து விழுந்ததால் அஜித் கை, கால்கள் எல்லாம் காயங்கள் ஏற்பட்டது. நான் இரண்டு கிலோ மீட்டருக்கு தள்ளி இருந்தேன். விஷயம் கேள்விப்பட்டவுடன் விபத்து நடந்த இடத்துக்குப் நான் சென்றேன். அப்போது அஜித் உடைந்து போன பைக்கையே பார்த்துக் கொண்டிருந்தார். நான் அவரிடம், சார் உங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லையே என்று கேட்டேன். அதற்கு அவர் எனக்கு ஒன்றுமில்லை, பைக்தான் உடைந்துவிட்டது நாளை ஷூட்டிங்க்கு என்ன செய்வது என்றார். ரைடிங் கியரை கழட்டிய போதுதான் அவருக்கு அடிபட்டிருக்கிறது என்பது தெரிய வந்ததும் நாங்கள் மிகுந்த கவலை அடைந்தோம். பின்னர் அவர் யார் கிட்ட பேசினார், என்ன பேசினார் என்று தெரியாது. அடுத்த மறு நாள் மற்றோரு பைக் வந்துவிட்டது. இதைபார்த்த படக்குழுவின் ஆச்சரியம் அடைந்தனர். இவ்வாறு வினோத் தெரிவித்தார்.

அஜித், எச் வினோத்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *