வலிமையை தொடர்ந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட டாக்டர் படக்குழு!!!
| | | |

வலிமையை தொடர்ந்து கிளிம்ப்ஸ் வீடியோ வெளியிட்ட டாக்டர் படக்குழு!!!

Spread the love

நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் படம் டாக்டர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் தயாரிப்பு நிருவனமான எஸ்.கே.புரொடக்‌ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் டாக்டர் படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன்

இப்படத்தில் நாயகியாக பிரியங்கா மோகனும், வில்லனாகா வினயும் நடித்துள்ளனர். மேலும் முக்கிய கதாபாத்திரங்களில் யோகிபாபு, அர்ச்சனா, தீபா ஆகியோர் நடித்துள்ளனர். டாக்டர் திரைப்படம் ஓடிடியில் வெளியாகும் என்று தகவல் வெளியான நிலையில் தற்போது படம் அக்டோபர் 9-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது குறிப்பிடதக்கது.

வினய், யோகிபாபு, பிரியங்கா மோகன்

இப்படத்தின் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. குறிப்பாக இதில் இடம்பெறும் ‘செல்லம்மா’ பாடல் பட்டி தொட்டியெங்கும் பட்டையை கிளப்பியதோடு மாபெரும் வரவேற்பையும் பெற்றது. 

கடந்த மாதம் வலிமை படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது, இதனை தொடர்ந்து தற்போது டாக்டர் படக்குழுவும் அதே பாணியில் கிளிம்ப்ஸ் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளது. மொத்தம் 75 நொடிகள் ஓடக்கூடிய அந்த வீடியோவில் நடிகர் சிவகார்த்திகேயன், பிரியங்கா மோகன் ஆகியோரின் அசத்தலான நடனம் இடம்பெற்று உள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *