லாபம் திரைப்படம் விமர்சனம்
| | | |

லாபம் திரைப்படம் விமர்சனம்

Spread the love

படத்தயாரிப்பு – 7 சிஸ் என்டர்டெயின்மென்ட், விஜய் சேதுபதி புரொடக்ஷன்ஸ்

இயக்கம் – எஸ்.பி.ஜனநாதன்

இசை – டி.இமான்

நடிப்பு – விஜய் சேதுபதி, ஸ்ருதிஹாசன், ஜெகபதிபாபு

பெருவயல் கிராமத்தில் விவசாய நிலங்களை அபகரித்து, மக்களை அடிமையாக்கி வைத்து இருக்கிறார் தொழிலதிபர் வணங்காமுடி (ஜெகபதி பாபு). 

விஜய் சேதுபதி, ஸ்ருதி ஹாசன்

தன் சொந்த ஊரான பெருவயல் கிராமத்துக்கு சுமார் ஆறேழு வருடங்களுக்குப் பிறகு வருகிறார் பக்கிரி என்கிற பக்கிரிசாமி (விஜய் சேதுபதி). விவசாயம் பொய்த்துப் போனதாக மக்கள் ஊரை விட்டே கிளம்பிக் கொண்டிருக்க பக்கிரியைக் கண்டதும் தங்கள் துயரம் தீர்க்க வந்த பெருமகன் என்று கொண்டாடுகிறார்கள். சில பல தடைகளுக்குப் பிறகு விவசாயத்தால் ஊரையும், ஊர் மக்களையும் செழிப்பாக்க முடியும் என்று விளக்கம் அளிக்கிறார் பக்கிரி. அதைச் செயல்படுத்துவதற்காக விவசாய சங்கத் தலைவராகவும் ஆகிறார். நண்பர்கள் படை சூழ கூட்டுப் பண்ணை விவசாய முறையை மக்களுக்கு அறிமுகப்படுத்துகிறார். இடையில் சர்க்கரை ஆலை, பருத்தி ஆலைக்கு விவசாயிகளை அழைத்துச் சென்று விளைபொருள் என்னவாக மாறுகிறது, அதிலிருந்து என்னென்ன பொருட்கள் தயாரிக்கப்படுகின்றன என்று நேரடியாக விளக்குகிறார்.

எஸ்.பி.ஜனநாதன்

கூட்டுப் பண்ணை விவசாய முறைக்கு கிராம மக்கள் ஆதரவு அளிக்கிறார்கள். இதை விரும்பாத தொழிலதிபர் வணங்காமுடி (ஜெகபதி பாபு) ஊரில் இருக்கும் சர்க்கரை ஆலை, பருத்தி ஆலை அதிபர்களுடன் இணைந்து சதி செய்கிறார். பக்கிரியை மக்கள் வெறுக்க வேண்டும் என்பதற்காக தொடர்ந்து அவரைத் தவறாகச் சித்தரிக்கிறார். இந்நிலையில் பக்கிரி மீது திருட்டுப் பழி விழுகிறது. ஊர் மக்களே அவரை அடித்துத் துன்புறுத்துகின்றனர்.

யாருக்காகோ கஷ்டப்பட்டாரோ அவர்களே தன்னை நம்பவில்லை என்ற சூழலில் பக்கிரி என்ன செய்கிறார், நான்கு தொழிலதிபர்கள் ஊர் மக்களை ஏமாற்றுவதற்கான உண்மையான காரணம் என்ன, ஊர் மக்கள் பக்கிரியை பிறகு நம்பினார்களா, பெருவயல் கிராமத்து விளை நிலங்கள் என்னாயின, பயோ டீசல் தொழிற்சாலையை நிறுவ முடிந்ததா போன்ற கேள்விகளுக்கு சற்றே பெரிய அளவில் விளக்கம் சொல்கிறது திரைக்கதை.

விஜய் சேதுபதி விவசாய சங்க தலைவராக வலம் வருகிறார். விவசாயத்தின் நன்மை, விவசாயிகள் பணம் சம்பாதிப்பது பற்றி படம் முழுக்க பேசுகிறார். ஒரு கட்டத்தில் அதிகம் பேசுவது போல் தோன்றுவதைதடுக்கமுடியவில்லை. 

ஆட்டக்காரியாக வரும் ஸ்ருதி ஹாசன், சிறப்பான நடனத்தை கொடுத்து இருக்கிறார். விஜய் சேதுபதியை காதலிப்பது, அவருக்கு உதவுவது என நடிப்பில் ஓரளவிற்கு கவர்ந்து இருக்கிறார். காமெடி சொல்லும்படியாக இல்லை.

ஜெகபதி பாபு வழக்கமான வில்லனாக வந்து மிரட்டுகிறார். விஜய் சேதுபதி நண்பர்களாக வரும் கலையரசன், டேனி, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் தங்களுக்கு கொடுத்த வேலையை செய்து இருக்கிறார்கள். 

விவசாயத்தை மையமாக வைத்து இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எஸ்.பி.ஜனநாதன். விலை நிலங்கள், விவசாயத்தின் நன்மை, விவசாயிகளின் நிலைமை, விவசாயிகளுக்கு கிடைக்கும் லாபம் எப்படி சுரண்டப்படுகிறது என்பதை அழுத்தமாக சொல்ல முயற்சித்து இருக்கிறார். ஆனால், சொன்ன விதம் சட்றே குழப்பமாக இருக்கிறது. 

இப்படத்திலும் விவசாயம், கார்ப்பரேட் அரசியல் பற்றி பேசி இருப்பதால், பழைய படங்களின் தாக்கம் நமக்குள் வருவதை தடுக்க முடியவில்லை. டி இமான் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம். பின்னணி இசை ஓரளவிற்கு கைகொடுத்து இருக்கிறது. ராம்ஜியின் ஒளிப்பதிவு படத்திற்கு பலம் சேர்த்து இருக்கிறது. 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *