முதல் முறையாக இயக்குனர் சுந்தர்.சி யுடன் இணையும் தனுஷ்!!!
| | | |

முதல் முறையாக இயக்குனர் சுந்தர்.சி யுடன் இணையும் தனுஷ்!!!

Spread the love

கர்ணன் வெற்றிக்கு பின், கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் தனுஷ் நடித்து வெளியான ஜகமே தந்திரம் படம் எதிர்பார்த்த வெற்றி பெறவில்லை. இதனை தொடர்ந்து பாலிவுட்டில் தனுஷ் நடித்துள்ள அத்ராங்கி ரே, ஹாலிவுட் படமான தி கிரேமேன் போன்ற படங்கள் அடுத்தடுத்து ரிலீசாக உள்ளன.

தனுஷ்

இந்தநிலையில் தற்போது கார்த்திக் நரேன் இயக்கத்தில் மாறன் மற்றும் மித்ரன் ஜவஹர் இயக்கத்தில் திருச்சிற்றம்பலம் படங்களில் நடித்து வரும் தனுஷ் அதையடுத்து சேகர்கம்முலா இயக்கும் படத்தில் நடிக்கப்போகிறார். அதனை தொடர்ந்து தனது அண்ணன் செல்வராகவன் இயக்கும் நானே வருவேன் படத்திலும் நடிப்பார் என்று தெரிகிறது.

தனுஷ், அக்ஷய் குமார் மற்றும் சாரா அலிகான்

சுந்தர்.சி இயக்கத்தில் அரண்மனை-3 அடுத்த மாதம் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து சுந்தர்.சி இயக்கும் புதிய படத்தில் தனுஷ் நடிக்கயிருப்பதாக தற்போது தகவல் வெளியாகியுள்ளது. அரண்மனை-3 வெளியானதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்கிற தகவல்களும் வெளியாகியுள்ளன.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *