மீனாவை சங்கடத்தில் ஆழ்த்திய ரஜினியின் கேள்வி
| | | |

மீனாவை சங்கடத்தில் ஆழ்த்திய ரஜினியின் கேள்வி

Spread the love

இயக்குனர் சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த் மீனா, குஷ்பூ, கீர்த்தி சுரேஷ் மற்றும் பலர் நடிக்கும் திரைப்படம் அண்ணாத்த. அண்ணாத்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. எஜமான், வீரா, முத்து படங்களை தொடர்ந்து கிட்டத்தட்ட 25 வருடங்களுக்கு பிறகு மீண்டும் ரஜினிகாந்த் மற்றும் மீனா இணைந்து நடிக்கும் படம் அண்ணாத்த.

அண்ணாத்த படப்பிடிப்பின்போது ரஜினிகாந்த் மற்றவர்கள் முன்னிலையில் அதிரடியான கேள்வி கேட்டு தன்னை திகைக்க வைத்தார் என சமீபத்திய பேட்டி ஒன்றில் கூறியுள்ளார் மீனா.

அதுபற்றி அவர் கூறும்போது “ஒரு நாள் படப்பிடிப்பு தளத்தில் திடீரென்று தன் அருகில் வந்து அமர்ந்த ரஜினி சார். மீனா நீ எனக்கு மிகப் பெரிய ஏமாற்றத்தை தந்து விட்டாய் என்று கூறினார். திடீரென்று ரஜினி சார் கேட்ட இந்த கேள்வியால் நானும் என் அருகில் இருந்த பலரும் அதிர்ச்சி அடைந்தோம்.

உடனே அவர் சிரித்துக்கொண்டே “நாங்கள் எல்லோரும் இத்தனை வருடத்தில் மாறி விட்டோம்… ஆனால் நீ மட்டும் வீரா படத்தில் நடித்தபோது பார்த்த மாதிரி அப்படியே இருக்கிறாயே” எனக் கூறி கலாட்டா பண்ணி என்னை மட்டுமல்ல அருகில் இருந்த அனைவரையும் சிரிக்க வைத்தார்” என்று கூறியுள்ளார் மீனா. 

அண்ணாத்த திரைப்படம் பொங்கல் வெளியீடாக வெளியாக உள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *