மஞ்சள் நிற பிகினியில் ரசிகர்களை மயக்கும் கியாரா அத்வானி
| | |

மஞ்சள் நிற பிகினியில் ரசிகர்களை மயக்கும் கியாரா அத்வானி

Spread the love

ஹிந்தித் திரையுலகத்தின் முன்னணி நடிகைகளில் ஒருவர் கியாரா அத்வானி. நடிகை கியாரா அத்வானி ‘Fugly’ என்ற திரைப்படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார்.அதையடுத்து அவர் நடித்த எம்.எஸ்.தோனி திரைப்படம் மாபெரும் வெற்றிப்பெற்றது. மேலும் கபீர் சிங், குட் நியூஸ், லட்சுமி’ உள்ளிட்ட ஹிந்திப் படங்களிலும், ‘பரத் அனி நேனு, வினய விதேய ராமா’ தெலுங்குப் படங்களிலும் நடித்துள்ளார். தற்போது ஹிந்தியில், ‘ஷெர்ஷா, பூல்புலையா 2, ஜக் ஜக் ஜீயோ, மிஸ்டர் லீலி’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

ஷங்கர் அடுத்து தெலுங்கில் இயக்க உள்ள ராம் சரண் படத்திலும், ஹிந்தியில் இயக்க உள்ள ரன்வீர் சிங் படத்திலும் இவர் தான் கதாநாயகியாக நடிக்கப் போகிறார் என்று தகவல்கள் வெளியாகி உள்ளது.

கியாரா அத்வானி சமூக வலைதளங்களில் ரொம்பவே ஆக்டிவாக இருப்பவர். நேற்று இன்ஸ்டாகிராமில் மஞ்சள் நிற பிகினி உடை புகைப்படம் ஒன்றை கியாரா வெளியிட்டார். அதற்குள்ளாக 19 லட்சம் வரை அப்படத்திற்கு லைக்குகள் கிடைத்துள்ளன. ஹிந்தி நடிகைகள் பலருக்கும் பிகினி ஆடை மீது அவ்வளவு காதல். அவ்வப்போது அந்த ஆடை அணிந்த புகைப்படங்களை அணிந்து லைக்குகளை குவித்து, ஒரு பரபரப்பை ஏற்படுத்தி, செய்திகளிலும் இடம் பெற்றுவிடுகிறார்கள்.

மற்ற ஆடைகளை அணியும் போது உடலின் மொத்த அழகும் வெளிப்படுவதில்லை. ஆனால், பிகினி அணியும் போதுதான் உண்மையான உடலழகு வெளிப்படுவதாக ஒரு கருத்து நிலவுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *