பிரபாஸிக்கு விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளம்!!!
| | |

பிரபாஸிக்கு விளம்பரங்களில் நடிக்க ரூ.150 கோடி சம்பளம்!!!

Spread the love

தெலுங்கில் முன்னணி நடிகரான பிரபாஸ், பாகுபலி படத்தில் நடித்ததன் மூலம் இந்திய அளவில் முன்னணி கதாநாயகனாக உயர்ந்தவர். இவருக்கு பட வாய்ப்பு குவிந்து வருகிறது. தற்போது ராதே ஷ்யாம், சலார், ராமாயண கதையை மையமாக வைத்து தயாராகும் ஆதிபுருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

பாகுபலி படத்துக்கு பிறகு நடிகர் பிரபாஸ் இந்திய அளவில் பிரபலமான நடிகர் ஆகிவிட்டதால் அவரின் மார்க்கெட் பன்மடங்கு உயர்ந்துவிட்டது. இதைக் கருத்தில் கொண்டு பல்வேறு நிறுவனங்கள் நடிகர் பிரபாஸை தங்கள் விளம்பரங்களில் நடிக்க வைக்க முயற்சித்துள்ளன.

கடந்த ஓராண்டில் நடிகர் பிரபாஸுக்கு காலணிகள், மின்னணு பொருட்கள், சோப்பு என ஏராளமான விளம்பரங்களில் நடிக்கும் வாய்ப்பு வந்துள்ளது. இவற்றில் நடித்திருந்தால் அவருக்கு ரூ.150 கோடி வரை சம்பளம் கிடைத்திருக்குமாம். ஆனால் அவர் அவற்றில் நடிக்க மறுத்துவிட்டாராம். தனக்கு அதிக ரசிகர்கள் சேர்ந்துள்ளதால் குறிப்பிட்ட விளம்பரங்களில் தான் நடிக்க வேண்டும் என அவர் கவனமாக இருப்பதாக கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *