பிரச்சனையில் சிக்கி தவிக்கும் பிரியா பவானி சங்கர்?
| | | |

பிரச்சனையில் சிக்கி தவிக்கும் பிரியா பவானி சங்கர்?

Spread the love

பிரியாபவானி சங்கர் திரையுலகில் “செய்தி வாசிப்பாளராக” புதிய தலைமுறை தொலைக்காட்சியில் 2011-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை பணியாற்றியுள்ளார். பின்னர் 2014-ம் ஆண்டில் விஜய் தொலைக்காட்சியில் “கல்யாணம் முதல் காதல் வரை” என்ற காதல் தொடரில் கதாநாயகியாக “பிரியா அர்ஜுன்” என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்தொடரின் மூலம் பல தமிழ் ரசிகர்களை பெற்றார்.

பிரியாபவானி சங்கர்

2017-ம் ஆண்டு “மேயாத மான்” திரைப்படத்தில் நடித்து தமிழ் வெள்ளித்திரையில் அறிமுகமாகியுள்ளார். இப்படத்திற்கு பின்னர் கடைக்குட்டி சிங்கம், மான்ஸ்டர் போன்ற திரைப்படங்களில் நடித்து தமிழ் திரையுலகில் பிரபலமானார்.

கடைக்குட்டி சிங்கம் படம் மூலம் புகழ் வெளிச்சத்துக்குள் வந்தவர் பிரியா பவானி சங்கர். தற்போது இவர் நடித்துள்ள நான்கு படங்கள் ரிலீசுக்கு தயாராகவும் ஐந்து படங்கள் படப்பிடிப்பிலும் இருக்கும் அளவுக்கு முன்னணி நடிகைகள் வரிசைக்கு உயர்ந்து வருகிறார். அதேபோல சோஷியல் மீடியாவில் எப்போதுமே ஆக்டிவாக இருக்கும் பிரியா, சமீபத்தில் வடிவேலு படத்துடன் காமெடியாக ஒரு பதிவிட்டிருந்தார்.

அதில் “நான் ஒரு கிரியேட் பெர்சன்.. அப்படியா என்ன கிரியேட் பண்ணுவீங்க..? நானே ஏதாச்சும் தேவை இல்லாத பிரச்சனைகளை கிரியேட் பண்ணிக்கொள்வேன்” என ஒரு ஜோக்கை பகிர்ந்துள்ளார். ஆனால் இதற்கு பதிலளித்துள்ள நகைச்சுவை நடிகர் சதீஷ், “அது என்னன்னு எனக்கு தெரியும் பிரியா. கவலைப்படாதே… சீக்கிரம் முடிஞ்சுடும்” என கூறியுள்ளார்”. அப்படி என்ன பிரச்சனையை பிரியா பவானி சங்கர் தானாக இழுத்துக்கொண்டாரோ..? என்று அவரது ரசிகர்கள் வருத்தத்தில் உள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *