பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல உள்ள பிரபல நடிகை யார் தெரியுமா?
| | | |

பிக்பாஸ் வீட்டுக்குள் வைல்டு கார்டு என்ட்ரியாக செல்ல உள்ள பிரபல நடிகை யார் தெரியுமா?

Spread the love

விஐய் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5-வது சீசன் அக்டோபர் 3-ந் தேதி தொடங்கியது. இதில் மொத்தம் 18 பேர் கலந்துகொண்டனர், அதில் 10 பெண் போட்டியாளர்கள், 7 ஆண் போட்டியாளர்கள், 1 திருநங்கை. முதல் வார இறுதியில் திருநங்கை நமீதா மாரிமுத்து, மருத்துவ காரணங்களுக்காக திடீரென வெளியேறினார். அதுமட்டுமின்றி முதல் வாரத்தில் எலிமினேஷன் இல்லாததால் தற்போது 17 போட்டியாளர்கள் உள்ளனர். 

ஷாலுஷம்மு

வழக்கமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் கலந்துகொள்வது வழக்கமான ஒன்று. 40 நாட்கள் கடந்த பின்னரே வைல்டு கார்டு என்ட்ரியாக போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்படுவார்கள். ஆனால் தற்போது முதல் வாரத்திலேயே நமீதா மாரிமுத்து வெளியேறியதால், அவருக்கு பதில் ஒரு வைல்டு கார்டு போட்டியாளரை உள்ளே அனுப்ப உள்ளார்களாம் என்று கூறப்பட்டுள்ளது.

இதனை தொடர்ந்து வருகிற அக்டோபர் 16-ந் தேதி நடிகை ஷாலு ஷம்மு வைல்டு கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டுக்குள் செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இவர் வருத்தப்படாத வாலிபர் சங்கம், மிஸ்டர் லோக்கல், இரண்டாம் குத்து போன்ற படங்களில் நடித்து பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.இவர் பிக்பாஸ் வீட்டிற்குல் சென்ற உடன் என்னன்ன பிரச்சனைகள் உருவகப்போகிறது என்று கோகப்கோகத்தான் தெரியவரும்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *