பிக்பாஸ் வீட்டுக்குள் நுலையும் கவர்ச்சி தேவதை பார்வதி நாயர்?
| | | |

பிக்பாஸ் வீட்டுக்குள் நுலையும் கவர்ச்சி தேவதை பார்வதி நாயர்?

Spread the love

தமிழ், கன்னடம், மலையாளம், ஆகிய மூன்று மொழி படங்களில் நடித்து வருபவர் நடிகை பார்வதி நாயர். 2015ம் ஆண்டு அஜித் நடிப்பில் வெளியான ‘என்னை அறிந்தால்’ திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தில் வில்லனாக நடித்த அருண் விஜய்க்கு ஜோடியாக நடித்தார். சிறிய கதாபாத்திரம் என்றாலும், அவரின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு இருந்தது. 

பார்வதி நாயர்

மலையாள நடிகையான இவர், ‘உத்தம வில்லன்’, ‘என்கிட்ட மோதாதே’, ‘நிமிர்’, ‘மாலை நேரத்து மயக்கம்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். தற்போது வைபவ் நடிப்பில் உருவாகி வரும் ‘ஆலம்பனா’ படத்தில் நடித்து வருகிறார்.

பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 வது சீசன் விரைவில் தொடங்க உள்ளது. கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி இருக்கும் விளம்பரங்கள் வரவேற்பை பெற்றுள்ளன. 

அடுத்த மாதம் தொடங்க இருக்கும் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்பவர்கள் என இணையதளத்தில் பட்டியல் ஒன்று வெளியாகி உள்ளது. அதில் நடிகை பார்வதி நாயர், நடிகர் ஜான் விஜய் மற்றும் சீரியல் நடிகை பாவனி ரெட்டி ஆகியோர் பெயர்களும் இடம் பெற்றுள்ளன.ஜி.பி முத்து, ரம்யா கிருஷ்ணன், ‘மைனா’ நந்தினி, ‘மைனா’ சூசன், வடிவுக்கரசி, ரமேஷ் கண்ணா, நடிகை ஷகிலாவின் மகள், லட்சுமி ராமகிருஷ்ணன் என பட்டியல் நீள்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *