பாய்ஸ் ஃப்ரெண்ட் ஒன்று உண்டு ஆனால் திருமணம் இல்லை - ஸ்ருதிஹாசன்!
| | |

பாய்ஸ் ஃப்ரெண்ட் ஒன்று உண்டு ஆனால் திருமணம் இல்லை – ஸ்ருதிஹாசன்!

Spread the love

நடிகை சுருதிஹாசன் ஏழாம் அறிவு, வேதாளம், புலி போன்ற பல தமிழ் மற்றும் தெலுங்கு, இந்தி படங்களில் நடித்துள்ளார். சில காலமாக திரையுலகை விட்டு விலகி இருந்த சுருதிஹாசன் தற்போது மீண்டும் நடிக்க தொடங்கியுள்ளார் தற்போது தமிழில் விஜய் சேதுபதியுடன் லாபகம் என்ற படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார் ஜனவரி 13th சங்கராந்தி அன்று வெளியான தெலுங்கு படமான மிகப் பெரிய வெற்றி அடைந்துள்ளது. 

நடிகை சுருதிஹாசன் டெல்லியை சேர்ந்த சாந்தனு ஹசாரியா என்பவரை காதலித்து வருகிறார். இருவரும் நெருக்கமாக எடுத்துக்கொண்ட புகைப்படங்களையும் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டு வருகிறார்.

இதற்கிடையில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரசிகர்களுடன் கலந்துரையாடினார். அப்போது ஒரு ரசிகர் உங்களுக்கு திருமணம் முடிந்துவிட்டதா? என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த சுருதிஹாசன் எனக்கு திருமணம் ஆகவில்லை என்றார்.  அப்போது ஒரு ரசிகர் உங்களுக்கு பாய் ஃபிரண்ட் இருக்கிறாரா என்ற கேள்விக்கு ஆம் என்று பதிலளித்தார்.

எப்போது திருமணம் செய்து கொள்வீர்கள்? என்ற இன்னொரு ரசிகர் கேள்விக்கு அது எனக்கு தெரியாது என்றார். மேலும் சுருதிஹாசன் கூறும்போது, ‘குடும்பத்தினர் உள்பட அனைவரும் பாதுகாப்பாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன். எல்லோரிடமும் அன்பு காட்டுங்கள். எனக்கு தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கில மொழிகள் தெரியும். தமிழில் பேசவும் எழுதவும் மெதுவாக படிக்கவும் தெரியும். ஆனால் எனது அப்பா அளவுக்கு என்னால் தமிழில் பேச முடியாது’.

ஏன் நீங்கள் ஒல்லியாக இருக்கிறீர்கள் என்று கேட்கிறார்கள். நான் ஒல்லியாக இல்லை. உடற்பயிற்சி செய்கிறேன். எனக்கு பிடித்த நிறம் கருப்பு, எனது தந்தை நடித்த படங்களில் மகாநதி. அபூர்வ சகோதரர்கள். விருமாண்டி மிகவும் பிடித்தவை. எனது அடுத்த தமிழ் படம் லாபம். அது விரைவில் ரிலீசாகும் என்றார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *