நெற்றிக்கண் பட இயக்குனருடன் முதல்முறையாக இணையும் ஆர்யா!!!
| | | |

நெற்றிக்கண் பட இயக்குனருடன் முதல்முறையாக இணையும் ஆர்யா!!!

Spread the love

தற்போது ஓ.டி.டி. தளங்களில் வெளியாகும் வெப் தொடர்களுக்கு எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்த இணைய தொடர்கள் திரைப்படங்களைப்போல் பிரம்மாண்டமாகவும், அழகிய காதல் காட்சிகள், ஆக்‌ஷன் மற்றும் மர்மம் அன்று அனைத்து தரப்பு ரசிகர்களை ஈர்க்கும் வகையில் இருப்பதாக பாராட்டுகள் கிடைத்துள்ளன. இணைய தொடர்களிள் நடிக்கும் நடிகர் – நடிகைகளுக்கு சினிமாவை விட அதிக சம்பளம் கொடுக்கப்படுகிறது. இதனால் முன்னணி நடிகர் – நடிகைகள் வெப் தொடரில் நடிக்க ஆர்வம் காட்டுகின்றனர்.

ஆர்யா

நடிகர் ஆர்யா நடித்த டேடி மற்றும் சார்பட்டா பரம்பரை ஆகிய படங்கள் ஓ.டி.டி.யில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. அதனை தொடர்ந்து தற்போது ஆர்யா, வெப் தொடரில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் அறிமுகமாகும் வெப் தொடரை, இயக்குனர் மிலிந்த் ராவ் இயக்க உள்ளார். இவர் சித்தார் நடித்த அவள், நயன்தாரா நடிப்பில் சமீபத்தில் வெளியான நெற்றிக்கண் ஆகிய படங்களை இயக்கியவர் என்பது குறிப்பிடதக்கது.

மேலும் இந்த வெப் தொடரில் ஆர்யாவுக்கு ஜோடியாக நடிகை வாணி போஜனும் மற்றும முக்கிய கதாபாத்திரத்தில் நடிகர் பசுபதியும் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மிலிந்த் ராவ் இயக்கத்தில் ஆர்யா நடிக்க இருப்பது இதுவே முதன்முறை ஆகும். விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

வாணி போஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *