நாளை வெளியாகும் விஜய் 66 அதிகாரப்பூர்வ அறிவிப்பு?
| | |

நாளை வெளியாகும் விஜய் 66 அதிகாரப்பூர்வ அறிவிப்பு?

Spread the love

தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகரான விஜய் நடித்து வெளிவந்த ‘மாஸ்டர்’ படம் தமிமில் நல்ல வரவேற்பையும் வசூலையும் பெற்றது, மேலும் தெலுங்கிலும் டப்பிங் செய்யப்பட்டு நல்ல வரவேற்பைப் பெற்றது. இதுவரை நேரடி தெலுங்குப் படங்கள் எதிலும் நடிக்காத விஜய் முதல் முறையாக தெலுங்கு தயாரிப்பாளர் தயாரிப்பில், தெலுங்கு இயக்குனர் இயக்க உள்ள தமிழ், தெலுங்கு மொழிகளில் தயாராக உள்ள படத்தில் நடிக்கப் போகிறார்.

பிரபல தெலுங்குத் தயாரிப்பாளரான தில் ராஜு படத்தைத் தயாரிக்க, வம்சி பைடிபள்ளி படத்தை இயக்கப் போகிறார். இப்படம் விஜய்யின் 66வது படமாக அமைய உள்ளது.

முதலில் இந்தப் படம் குறித்து தகவல்கள் வெளிவந்தாலும், இயக்குனர் வம்சி அதிகாரப்பூர்வ அறிவிப்புக்கு முன்பாகவே ஒரு பேட்டியில் இது பற்றி சொல்லி இருந்தார். அந்த காரணத்தால் விஜய் இப்படத்தில் நடிக்கத் தயங்குகிறார் என்று கூட தகவல் வெளியானது. 

ஆனால், அவையனைத்தையும் பொய்யாக்கும் விதத்தில் நாளை விஜய் பிறந்தநாளை முன்னிட்டு விஜய் 66 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. விஜய் 65 படத்தின் தலைப்பு இன்று மாலையே வெளியாக உள்ளது. நாளை விஜய் 66 அறிவிப்பும் வெளியானால் நிச்சயம் விஜய் ரசிகர்களுக்கு டபுள் கொண்டாட்டம் தான்.

Similar Posts

One Comment

  1. I like Vijay Anna ❤️.. wish you happy birthday anna i am from Sri lanka.. my dream one day i meet you ❤️❤️❤️❤️👍👍

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *