| | |

தொடர்ந்து 2 படங்களில் நடிக்க ரஜினி திட்டம் – இயக்கப்போவது யார் என்று தெரியுமா?

Spread the love

நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான தர்பாரின் வெற்றிக்கு பின், ‘அண்ணாத்த’படத்தில் நடித்து வருகிறார். சிவா இயக்கத்தில் உருவாகி வரும் இப்படத்தில் ரஜினியுடன் நயன்தாரா, குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், சூரி, பிரகாஷ் ராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இப்படம் வருகிற நவம்பர் 4-ந் தேதி தீபாவளி பண்டிகையன்று வெளியிடப்பட உள்ளது.

இந்நிலையில், நடிகர் ரஜினி அடுத்தடுத்து இரண்டு படங்களில் நடிக்க திட்டமிட்டுள்ளாராம். அதன்படி ரஜினியின் 169-வது படத்தை, கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தை இயக்கிய தேசிங்கு பெரியசாமி இயக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இப்படத்தை ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *