திடிர் என்று பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!!!
| | |

திடிர் என்று பிரபல நடிகை தூக்கிட்டு தற்கொலை!!!

Spread the love

கன்னட படம் மற்றும் தொலைக்காட்சி தொடர் நடிகையான சௌஜன்யா, பெங்களூரு அருகே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் இன்று காலை தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டார். இவர் பல தொலைக்காட்சி தொடர் மற்றும் பல படங்களில் முக்கிய கதாபத்திரங்களில் நடித்துள்ளார். இவரது  தற்கொலைகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சௌஜன்யா

அவரது வீட்டில் இருந்து கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்ட நான்கு பக்க கடிதத்தை போலீசார் கைப்பற்றி உள்ளனர். அந்த கடிதத்தில், அவர் உடல்நலக் குறைவு மற்றும் சினிமா துறையில் போதிய வருமானம் இல்லாத சூழல் காரணமாக, கடந்த பல நாட்களாக சிரமப்பட்டு வந்துள்ளார். இத்தகைய சூழ்நிலையில் இந்த முடிவை எடுப்பதைத் தவிர வேறு வழி தெரியவில்லை என்று சௌஜன்யா குறிப்பிட்டுள்ளார்.

அந்தக் கடிதத்தில் செப்டம்பர் 27, 28 மற்றும் 30ஆகிய மூன்று தேதிகள் எழுதப்பட்டுள்ளன. இதில் இருந்து சௌஜன்யா மூன்று நாட்களுக்கு முன்பே தன் உயிரை மாய்த்துக் கொள்ள முடிவு செய்ததாக போலீசார் கருதுகின்றனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *