தமிழ் திரையுலகில் 28 ஆண்டுகளை நிறைவு செய்தார் தல அஜித்!!!
| | | |

தமிழ் திரையுலகில் 28 ஆண்டுகளை நிறைவு செய்தார் தல அஜித்!!!

Spread the love

ஒவ்வொரு பிரபலங்களுக்கும் ஒரு ரசிகர் பட்டாளம் உண்டு. ஆனால் பிரபலங்களே ஒருவருக்கு ரசிகர் பட்டாளமாக இருக்குமென்றால் அதில் அஜித் முக்கியமானவர். ‘தல’ என்ற செல்லப்பெயருடன் கோலிவுட்டில் வலம் வரும் அஜித்துக்கு நாளுக்கு நாள் ரசிகர்கள் கூடிவருவது மறுக்கமுடியாத ஒன்று. இன்றைய தேதிக்கு அதிக அளவில் ரசிகர்களை கொண்டுள்ள நடிகர்களில் ஒருவர் அஜித். வருடத்துக்கு ஒரு படமே அதிசயம் என்று இருந்தாலும், அஜித்துக்கான ரசிகர் பட்டாளம் துளியும் குறையாது. எத்தனையோ தோல்விகளை கொடுத்து சினிமாவில் போராடிக்கொண்டிருந்த வேளையிலும் அஜித்தை அவர் ரசிகர்கள் கொஞ்சம் கூட விட்டுக்கொடுக்கவில்லை என்பது இன்றளவும் பலருக்கும் அதிசயம். 

80களில் பிறந்தவர்கள், 90களில் பிறந்தவர்கள், 2k கிட்ஸ் என அனைத்து தரப்பு ரசிகர்களும் அஜித்துக்கு உண்டு. அஜித் திரைப்படத்தின் முதல் நாள் முதல் காட்சி திருவிழாவைப்போல கொண்டாடப்படுகிறது என்றால் அங்கிருப்பது வெறும் இளைஞர்கள் மட்டுமல்ல. சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பங்கள் சேர்ந்து கொண்டாடும் திருவிழாவாகவே அது இருக்கிறது.  

இப்படிப்பட்ட அஜீத் தமிழ் திரையுலகில் அறிமுகமாகி இன்றுடன் 28 ஆண்டுகள் நிறைவடைகின்றன 1993-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியான அமராவதி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நாயகனாக அறிமுகமானவர் அஜித் அந்தப் படம் பெரிய வெற்றி பெறவில்லை என்றாலும் யார் இந்த அலங்கார இறங்கி என கவனிக்கப்பட்டார்.

சில தோல்விப் படங்களுக்குப் பிறகு ஆசை படத்தின் மூலம் முதல் வெற்றியை ருசித்தார்.அதற்கடுத்து காதல் கோட்டை படம் அவரது அந்தஸ்து மேலும் உயர்த்தியது மீண்டும் சில தோல்விப் படங்களால் தடுமாறினாலும் இடையிடையே வந்த சில  வெற்றிப் படங்கள் அவரை காப்பாற்றி வந்தன. 1999 ஆம் ஆண்டு எஸ்.ஜே சூர்யா இயக்கத்தில் வெளிவந்த வாலி படத்தில் அவர் இரு வேடங்களில் நடித்திருந்தார். இந்தப் படத்தில் இவர் சிறப்பாக நடித்து இருந்ததாக தமிழக அரசின் சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். அதன்பின் அவருக்கு அனைத்து படங்களும் ஏறுமுகமாக அமைந்தது. 

பின்னர் வெளியான தீனா படத்தின் மூலம் ஆக்சன் ஹீரோவாக தன்னை நிரூபித்துக் கொண்டார். தொடர்ந்து சில தோல்விப் படங்கள் சில வெற்றிப் படங்கள் என்று அவருடைய திரைப்பயணம் இன்றுவரை தொடர்ந்து கொண்டு இருக்கிறது. ஆனாலும் அவருடைய இமேஜ் அவருக்கான வரவேற்பும் குறையவே இல்லை என்பது உண்மை. சில படங்கள் தோல்வி படங்களாக இருந்தாலும் பெரிய ஓபனிங் இருந்தது என்பதுதான் கமர்ஷியல்உண்மை.

சினிமா பின்னணி இல்லாமல் திரையுலகத்தில் நுழைந்து பல போராட்டங்களுக்குப் பிறகு உயர்ந்து ரசிகர் மன்றங்களை இல்லாமல் இந்த அளவிற்கு ரசிகர்களை சேர்த்து வைத்திருக்கும் ஒரே நடிகர் அஜீத் மட்டுமே என்பதை அவரது போட்டியாளர்களை பாராட்டி சொல்லவர்கள்.

28 ஆண்டுகள் முடிந்து 29வது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அஜித்தின் திரைப்பயணத்தில் நம் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *