தன் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய டாப்ஸி. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!
| | |

தன் திருமணம் குறித்து வெளிப்படையாக பேசிய டாப்ஸி. அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

Spread the love

2011ஆம் ஆண்டு வெளியான தனுஷின் ஆடுகளம் படத்தின் மூலம் கதாநாயகியாக தமிழ் ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டவர் நடிகை டாப்ஸி.

அதன் பிறகு அஜித்துடன் ஆரம்பம், ராகவா லாரன்ஸின் காஞ்சனா-2 போன்ற படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றார். தமிழிலிருந்து அப்படியே தெலுங்கிற்கு சென்ற டாப்ஸி அங்கேயே செட்டிலாகிவிட்டார். டாப்ஸி நடிக்கும் அனைத்து படங்களும் பெரிய அளவில் வசூல் செய்து வருகிறது. அடுத்ததாக விஜய் சேதுபதியுடன் ஒரு படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் பிஸியான நடிகையாகவும் அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகவும் நடித்து வருகிறார். 

இந்த நிலையில், தனது திருமணம் குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள டாப்ஸி தற்போதைக்கு திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் தனக்கு இல்லை என எல்லா கதாநாயகிகளை போலவே வழக்கமான பதிலை அளித்துள்ளார்.

அதேசமயம் இன்னொரு தகவலையும் அவர் கூறியுள்ளார், அதாவது எப்போது, தான் வருடத்திற்கு 2 படங்களில் மட்டும் நடிக்கும் அளவிற்கு நிலைமை மாறுகிறதோ, அப்போது திருமணம் செய்து கொள்வேன் என்றும் கூறியுள்ளார். ஆனால் தற்சமயம் கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு ஐந்து முதல் ஆறு படங்களில் அவர் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *