தன் திருமணத்துக்கு சம்மதம் சொன்னாரா நயன்தாரா?
| | |

தன் திருமணத்துக்கு சம்மதம் சொன்னாரா நயன்தாரா?

Spread the love

நயன்தாரா தமிழ், தெலுங்கில் மற்றும் மலையாளம் மொழி படங்களில் முன்னணிநடிகையாக உள்ளார், மேலும் தென்னிந்திய மொழி படங்களில் அதிக சம்பளம் பெறும் நடிகையாகவும் அவர் உள்ளார். இவர் ஏற்கனவே 2 முறை காதல் முறிவை சந்தித்து மூன்றாவதாக இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் காதல் வயப்பட்டு உள்ளார். கடந்த 2015-ம் ஆண்டு நானும் ரவுடிதான் படத்தில் நடித்தபோது இருவருக்கும் காதல் மலர்ந்தது. 

சுமார் 6 வருடங்களாக காதலித்து வரும் இவர்கள், விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. நடிகை நயன்தாரா குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது என்றும், இதனால் உடனடியாக திருமணம் செய்து கொள்ளும்படி நயன்தாராவை குடும்பத்தினர் வற்புறுத்துவதாகவும், அவர்களது நிர்ப்பந்தம் காரணமாக நயன்தாராவும் திருமணத்துக்கு சம்மதித்து விட்டதாகவும் மலையாள ஊடகங்களில் செய்திகள் வெளியாகி உள்ளது. 

இதனால் அடுத்த சில மாதங்களில் நயன்தாரா திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நடிகை நயன்தாரா கைவசம் அண்ணாத்த, நெற்றிக்கண், காத்துவாக்குல ரெண்டு காதல் ஆகிய படங்கள் உள்ளன. இதுதவிர படத்தயாரிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார். 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *