நான் கேம் ஆரம்பிச்ச்ரொம்ப தல அஜீத், பறக்கவிட ரசிகர்கள். வெளியானது வலிமை Glimpse வீடியோ...
| | | | | |

தன் கேமை ஆரம்பிச்ச தல அஜீத், தெறிக்கவிட ரசிகர்கள். வெளியானது வலிமை Glimpse வீடியோ…

Spread the love

’தல’ அஜீத் ரசிகர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்துக் காத்திருந்த வலிமை பட முன்னோட்டம் தற்போது வெளியாகியுள்ளது. வெளியான ஐந்து நிமிடங்களிலேயே பல லட்சம் வியூஸ்களைக் கடந்துள்ளது இந்த முன்னோட்டம். 

அஜீத்

இயக்குனர் எச் வினோத் இயக்கத்தில், அஜித் இரண்டாவது முறையாக நடிக்கும் திரைப்படம் ‘வலிமை’. யுவன் சங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ளது. அஜித்துக்கு ஜோடியாக ஹூமா குரேஷி நடித்துள்ளார். ஸ்டைலிஷ் வில்லனாக கார்த்திகேயா, சுமித்ரா, யோகிபாபு, புகழ், உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர் இந்த திரைப்படத்தின் ஒட்டுமொத்த ஷூட்டிங் பணிகளும் நிறைவடைந்து தற்போது போஸ்ட் புரோடக்ஷன் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. மேலும் அவ்வப்போது இந்த படம் குறித்த தகவல்கள் மற்றும் வீடியோக்களை, படக்குழு தொடர்ந்து வெளியிட்டு வருகிறது.

இந்த படத்தின் மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடம் மற்றும் ரிலீஸ் தேதி ஆகிய தகவல் வெளியானதை தொடர்ந்து, இன்றைய தினம் இந்த படத்தின் glimpse வீடியோ வெளியாகும் என தெரிவிக்கப்பட்டது. இதற்காக அஜித் ரசிகர்கள் வழி மீது விழி வைத்து காத்திருந்த நிலையில்,  அஜித் பைக்கில் தாறுமாறாக ஸ்டண்ட் காட்சியில் அசத்தும் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது.

கார்த்திகேயா

ஹாலிவுட் படத்திற்கு இணையான ஆக்சன் காட்சிகள், மற்றும் தரமான வசனங்கள் இடம்பெற்றுள்ளது எடுத்ததுமே… ‘நீங்கள் கடைந்தெடுத்த விஷம் நாங்கள், சாத்தானின் அடிமைகள் நாங்கள், இருள் வலைதான் எங்கள் உலகு, அதில் அத்துமீறி எவனாவது கால் வைத்தால்? என்ற வசனம் வேறு லெவலுக்கு உள்ளது. அஜித் மிகவும் ஸ்டைலிஷாக ’கெட் ரெடி ஃபார் தி கேம்’ என வில்லன் சொல்ல ‘நான்  கேம் ஆரம்பிச்சாச்சு ரொம்ப நேரமாச்சு தம்பி’ என அதிரும் குரலில் அஜீத் வசனம் பேச அதிரவைப்பதாக உள்ளது முன்னோட்டம். 

பொங்கல் திருவிழாவை முன்னிட்டு வெளியாகும் என அதிகரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *