| | | |

தன் அழகாலும் வித்தியாசமான உடையாலும் ரசிகர்களை ஈர்க்கும் இளம்புயல் ரிது வர்மா!!!

Spread the love

கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களை கவர்ந்த ரிது வர்மா, 1990ஆம் ஆண்டு மார்ச் மாதம் 10ஆம் நாள் தெலுங்கானாவில் ஹைத்ராபாத்தில் பிறந்தார். ரிது வர்மா தனது படிப்பை முடித்தவுடன் அனுகோகுண்டா என்ற குறும்படத்தில் நடித்தார். 48HR FIL PROJECT COMPETITION ல் சிறந்த படத்திற்கான விருதைப் பெற்றது மட்டுமல்லாமல், இவருக்கு சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றுத் தந்தது. பின்னர் கேன்ஸ் திரைப்பட விழாவிலும் இந்த குறும்படம் திரையிடப்பட்டது.

ரிது வர்மா

   இந்த குறுப்படத்திற்கு பின்னர் தான் தெலுங்கு திரையுலகில் கால் பதித்தார் ரிது. முதல் படமாக  பிரேம இஷ்க் காதல் படம் அமைந்தது. பின்னர் எவடே சுப்ரமணியன், நா ரகுமருடு ஆகிய படங்களில் நடித்தார்.

    தொடர்ந்து சின்ன சின்ன கதாபத்திரங்களிலேயே நடித்து வந்த இவருக்கு ‘பெல்லி சுப்புலு’ படத்தில் நாயகியாக நடிக்கும் வாய்ப்பு கிட்டியது. விஜய் தேவரகொண்டாவின் முதல் வெற்றி திரைப்படமாக அமைந்த பெல்லி சூப்புளு படத்தில் நடித்ததன் முலம் தெலுங்கு ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார் ரிது வர்மா. இந்த படத்தின் மூலம் சிறந்த நடிகையாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டார் ரிதுவர்மா. இந்த படத்திற்காக 2016ன் சிறந்த நடிகைக்கான விருதையும் பெற்றார்.

    பின்னர் இயக்குனர் கவுதம் மேனன்,தமிழில் விக்ரம் நடிக்கும் ‘துருவ நட்சத்திரம்’ படத்தில் நடிக்க ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். அதில் விக்ரமுடன் செம ரொமான்ஸில் கலக்கி உள்ளாராம். இயக்குனர் தேசிங்க் பெரியசாமி இயக்கத்தில் சென்ற ஆண்டு வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தில் துல்கர் சல்மானுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படம் அனைத்து சென்டர்களிலும் பிளாக்பஸ்டர் வெற்றிபெற்றது. இதில் தன் இயல்பான நடிப்பால் அனைவரையும் மிரட்டி இருந்தார் ரிது வர்மா.

தெலுங்கு மற்றும் தமிழ் என இரு மொழிகளிலும் கலக்கி வருகிறார் ரிது வர்மா. தமிழில் இவர் வேலையில்லா பட்டதாரி2, கண்ணும்கண்ணும் கொள்ளையடித்தால் என இரண்டே இரண்டு படங்கள் தான் இவர் நடித்திருந்தாலும் இவருக்கு தமிழ் திரையுலகில் ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். தொடர்ந்து தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்துவருகிறார்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *