தனுஷின் ஜகமே தந்திரம்
|

தனுஷின் ஜகமே தந்திரம் டிரெய்லர்

Spread the love

தனுஷ் நடிப்பில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான கர்ணனின் மாபெரும் வெற்றிக்குப்பின் வெளியாகும் படம் ஜகமே தந்திரம். கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியாக உள்ள ஜகமே தந்திரம் படம் நேரடியாக நெட்ஃபிக்ஸ் ஓ.டி.டி தளத்தில் ஜூன் 18-ஆம் தேதி வெளியாக உள்ளது.

இந்த படத்தில் ஐஸ்வர்யா லட்சுமி, ஹாலிவுட் நடிகர் ஜேம்ஸ் காஸ்மோ, கலையரசன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

இப்படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை சந்தோஷ்நாராயணன் அமைத்துள்ளார்.
இந்த வருடம் பிப்ரவரி 22ஆம் தேதி இப்படத்தின் டீஸர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் கடந்த வாரம் இப்படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.

இதற்கிடையில் இப்படத்தின் முன்னோட்டம் ஜூன் 1ஆம் தேதி வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. அதேபோல் ஜூன் 1ஆம் தேதி 10 மணி அளவில் ஜகமே தந்திரத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டு மக்களிடம் நல்ல ஆதரவு பெற்று வருகிறது.

இதுவரை பல திரைப்படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியிடப்பட்டு இருந்தாலும் அதிக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட படம் ஜகமே தந்திரம் மட்டுமே, ஜகமே தந்திரம் 17 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நெட்ல ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *