டிவிக்கு சென்ற தமன்னா அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!
| | |

டிவிக்கு சென்ற தமன்னா அதிர்ச்சியில் ரசிகர்கள்!!!

Spread the love

தமன்னா 1989 ம் ஆண்டு டிசம்பர் 21 ம் தேதி சந்தோஷ் மற்றும் ரஜனி பாட்டியா ஆகியோருக்கு மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் பிறந்தார். 

தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக இருப்பவர் தமன்னா. 2005ல் சந்த் சா ரோஷன் செகரா என்ற இந்தித் திரைப்படத்தில் அறிமுகமானார். பின்னர் தமிழ் திரைப்பட உலகில் கேடி படம் மூலம் அறிமுகியிரிந்தாலும் கல்லூரி திரைப்படத்தின் மூலம் தான் தமன்னாவுக்கு சிறப்பு அங்கீகாரம் கிடைத்தது. தமிழ் ,தெலுங்கு , கன்னடம், மராத்தி, ஹிந்தி ஆகிய மொழிகளில் மொத்தம் 70 படங்களிலும், 65 படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இவர் நடிப்பில் தற்போது நவம்பர் ஸ்டோரி என்னும் வெப் தொடர் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் வி.ஐ.பி.யில் வெளியாகி உள்ளது. இந்தத் தொடர், அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது, இந்தியா முழுவதும் உள்ள பார்வையாளர்கள், இத்தொடரின் கதை மற்றும் இதில் நடித்தவர்கள் திறனை பாராட்டி வருகின்றனர். 

முன்பெல்லாம் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்கள், நடிகைகள் டிவியில் பேட்டி கொடுப்பதற்கும், திரைப்படத்தின் விளம்பரத்திர்காகவும் மட்டுமே பயன்படுத்தினர். இதற்கு காரணம் சினிமாவில் மார்க்கெட் இழந்த நடிகர் நடிகை மற்றும் டிவி பக்கம் செல்வார்கள் என்ற ஒரு இமேஜ் நிலவியது. ஆனால் அந்த நிலை தற்போது மாறி, கமலஹாசன்,சரத்குமார், சூரியா, அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி போன்ற முன்னணி நடிகர்கள் டிவிகளில் நிகச்சிகளை தொகுத்து வழங்கி வெற்றி அடைந்துள்ளது.

சன் டிவியில் ‘மாஸ்டர் செப்’ என்ற புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாக உள்ளது. இந்த நிகழ்ச்சியை விஜய் சேதுபதி தொகுத்து வழங்குகிறார். இதே நிகழ்ச்சியை கன்னடத்தில் ‘நான் ஈ’ சுதீப்புமும், தெலுங்கில் தமன்னாவும் தொகுத்து வழங்க உள்ளனர். தமன்னா இதுவரை எந்த ஒரு டிவி நிகழ்ச்சியையும் தொகுத்து வழங்கியதில்லை. முதல் முறையாக இந்த ‘மாஸ்டர் செப்’ நிகழ்ச்சியை தொகுத்து வழங்க போகிறார். இதற்காக அவருக்கு மிகப் பெரிய தொகை சம்பளமாக வழங்கப் பட்டுள்ளது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *