சூது கவ்வும் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஆர்யா!!
| |

சூது கவ்வும் இயக்குனர் படத்தில் நடிக்கும் ஆர்யா!!

Spread the love

தமிழ் திரையுலகில் முன்னணி நடிகரான ஆர்யா, அறிந்தும் அறியாமலும் உள்ளம் கேட்குமே கலாபக்காதலன் ஒரு கல்லூரியின் கதை வட்டாரம் நான் கடவுள் பாஸ் என்கிற பாஸ்கரன் மதராசபட்டினம் போன்ற பல படங்கள் நடித்துள்ளார். அவற்றுள் அறிந்தும் அறியாமலும் உள்ளம் கேட்குமே கலாபக்காதலன் நான் கடவுள் பாஸ் என்கிற பாஸ்கரன் மதராசபட்டினம் போன்ற படங்கள் அவரை முன்னணி அந்தஸ்திற்கு உயர்த்தியது. 

ஆனால் அதற்குப் பிறகு அவருக்கு அமைந்த படங்கள் வெற்றிப் படங்களாக அமையவில்லை. பின்பு சுதாரித்துக் கொண்ட நடிகர் ஆர்யா சமீபகாலமாக கவனமுடன் படங்களை தேர்வு செய்து வருகிறார். தற்போது ஆர்யா நடித்து ஓ.டி.டி தளத்தில் வெளியான டெடி படத்தின் மூலம் குடும்ப ரசிகர்கள் மற்றும் குழந்தை ரசிகர்களை அவர் பெற்று தந்தது. தற்போது ஆர்யா நடித்து வரும் அரண்மனை 3, சார்பேட்டை பரம்பரை, எனிமி போன்ற படங்கள் அவரை முன்னணி அந்தஸ்துக்கு உயர்த்தும் என்கிறார்கள். 

இந்நிலையில் ஆர்யா சூது கவ்வும் படத்தை இயக்கிய நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்க இருக்கிறார். நலன் குமாரசாமி சூது கவ்வும் படத்திற்கு பிறகு கவனிக்கத்தக்க படம் தரவில்லை. அவர் இயக்கிய காதலும் கடந்து போகும் படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றி பெற்று தரவில்லை. அதன்பிறகு படம் இயக்காமல் பல ஆண்டுகள் கதை, திரைக்கதை, வசனம் எழுதிக் கொண்டிருந்தார். 

இப்போது பல ஆண்டுகள் உழைப்பில் ஒரு ஸ்கிரிப்டை தயார் செய்து இருக்கிறார், இந்தப் படத்தில் ஆர்யா நடிக்கிறார். இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் நிறுவனம் தயாரிக்கிறது. இது பற்றி முறையான அறிவிப்பு விரைவில் வெளியாக இருக்கிறது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *