சாக்ஷி அகர்வாலின் பாய்பிரண்டுடன் இரும்பு கம்பியால் அடி வாங்கிய பிரபுதேவா!!!
| | |

சாக்ஷி அகர்வாலின் பாய்பிரண்டுடன் இரும்பு கம்பியால் அடி வாங்கிய பிரபுதேவா!!!

Spread the love

சிம்பு நடித்த படமான அன்பானவன் அடங்காதவன் அசராதவன் படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தற்போது பிரபுதேவா நடிக்கும் பகிர என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் நாயகிகளில் ஒருவராக நடிக்கிறார் சாக்ஷி அகர்வால். சாக்ஷி அகர்வாலின் பாய் பிரண்டாக நடிப்பதற்கு ஒரு புதுமுகம் தேவைப்பட்டது. எனவே அதற்கான ஆடிஷன் வைத்து தேர்ந்தெடுக்கப்பட்டவர் கோபிநாத் ரவி. இவர் மிஸ்டர் இந்தியா பட்டம் பெற்றவர். மேலும் பல மாடல் ஷோக்களில் பங்கேற்றுள்ளார்.

கோபிநாத் ரவி

இந்த படத்தில் நடித்த அனுபவம் பற்றி அவர் கூறும்போது “இந்த படத்தில் சாக்ஷி அகர்வாலின் பாய் பிரண்டாக நடித்துள்ளேன். அவரை மற்றவர்களிடம் இருந்து பாதுகாப்பது தான் எனது வேளை. நான் நடித்த முதல் காட்சியிலேயே பிரபுதேவாவை இரும்பு கம்பியால் அடிக்க வேண்டியிருந்தது, பதட்டத்துடன் நான்கைந்து டேக்குகள் எடுத்தேன். அதன்பிறகு பிரபுதேவா எனது பதற்றத்தைப் போக்கி இயல்பாக நடிக்க வைத்தார்.என்றார் கோபிநாத்”

மேலும் அவர் இந்த படத்தைப் பற்றிக் கூறும்போது இது ஒரு சஸ்பென்ஸ் த்ரில்லர் திரில்லர் வகை படம் விரைவில் படம் வெளியாகி மாபெரும் வெற்றிப் படமாக அமையும், இந்த படம் எனக்கு திருப்புமுனையாக அமையும் என்று கூறினார். என்று கூறினார் கோபிநாத் ரவி.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *