சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்ப்பு!!!
| | |

சமந்தா தனது கணவர் நாக சைதன்யாவை பிரிந்து விட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிப்ப்பு???

Spread the love

சென்னையில் பிறந்த சமந்தா தி. நகரில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் ஆங்கிலோ – இந்திய மேல்நிலைப்பள்ளியில் இளமைக்கால கல்வியும், பின்னர் ஸ்டெல்லா மேரிஸ் கல்லூரியில் வணிகவியல் துறையில் இளங்கலைப் பட்டமும் பெற்றார்.சமந்தாவின்யா இயற்பெயர் யசோதா. கல்லூரியில் படிக்கும் போதே நாயுடு ஹாலில் விளம்பர நடிகையாகவும் பணியாற்றினார். பின்னர் கௌதம் மேனன் மூலம் தமிழ்த் திரைப்படத்தில் அறிமுகமானார்.

நாகசைதன்யாவை, சமந்தா

தொடர்ந்து பல படங்களில் நடித்ததன் மூலம் முன்னணி நடிகை அந்தஸ்துக்கு உயர்ந்தார். தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் போதே 2017 ஆம் ஆண்டு தெலுங்கு நடிகர் நாகார்ஜுனாவின் மகனும் நடிகருமான நாகசைதன்யாவை நடிகை சமந்தா காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கும் திருமணமாகி 4 ஆண்டுகள் ஆகும் நிலையில், தற்போது இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு பிரிந்து வாழ்வதாகவும், விரைவில் அவர்கள் விவாகரத்து செய்து கொள்ள இருப்பதாகவும் தகவல் பரவி வருகிறது. இதற்கு ஆரம்ப புள்ளியாக திருமணத்திற்கு பின் சமூகவலைதளத்தில் தனது பெயரை சமந்தா அக்கினேனி என மாற்றிய சமந்தா சில வாரங்களுக்கு முன் ‛எஸ் என்று மட்டும் மாற்றினார். அப்போதே இவர்கள் பிரிவதாக பரபரப்பு நிலவியது. 

தொடர்ந்து சமந்தா தனித்து சுற்றுலா சென்றது, நாகசைதன்யா பட விழாவில் பங்கேற்காதது, அவருக்கு மட்டும் வாழ்த்து தெரிவிக்காமல் சாய் பல்லவிக்கு வாழ்த்து தெரிவித்தது, ஹிந்தி நடிகர் அமீர்கானுக்கு நாகர்ஜூனா வைத்த விருந்தில் பங்கேற்காதது என அடுத்தடுத்த நிகழ்வுகள் இவர்கள் பிரிவதை உறுதி செய்வதாகவே அமைந்தது. ஆனால் இதுப்பற்றி நேரடியாக இருவரும் எதுவும் கருத்து கூறாமல் இருந்தனர். 

இதனை தொடர்ந்து சமந்தா மற்றும் நாகசைதன்யா இருவரும் தாங்கள் பிரிந்து விட்டதாக அறிவித்து இருக்கிறார்கள். அவர்கள் வெளியிட்டுள்ள பதிவில், நாங்கள் இருவரும் கடந்த 10 வருடங்களாக நட்பாக பழகி வருகிறோம். இந்த நட்பு எங்கள் திருமணம் வரை சென்றது. தற்போது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்தது. நாங்கள் இருவரும் பிரிந்து விட்டோம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் எங்கள் முடிவுக்கு ரசிகர்கள், நண்பர்கள், பத்திரிகையாளர்கள் அனைவரும் மதிப்பு கொடுக்கும் படி கேட்டுக் கொள்கிறோம் என்று பதிவிட்டுள்ளனர்.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *