| | |

கே.ஜி.எப் இயக்குனரின் இயக்கத்தில் நடிக்கும் பிரபாஸ்?

Spread the love

தெலுங்கு திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக பிரபாஸ் திகழ்கிறார். இவருக்கு ஏராளமான ரசிகர்கள் பட்டாளம் இருக்கிறது. இவரது திரை வாழ்க்கையில் சில வெற்றிகள் கிடைத்திருந்தாலும், “பாகுபலி” திரைப்படம் புதிய உச்சத்திற்கே கொண்டு சென்றது.

பாகுபலியின் மாபெரும் வெற்றிக்கு பின் பிரபாஸ் மற்றும் ஷ்ரத்தா கபூர் நடித்த சாஷா எதிர்பார்த்த வெற்றிபெறவில்லை. அதன்பின் பிரபாஸ் மற்றும் பூஜா ஹெக்டே நடிக்கும், ‘ராதே ஷியாம்’ பெரும் பொருச்செலவில் உருவாகிவருகிறது. இந்த படத்தின் முதல் பார்வை முதல், போஸ்டர் வரை அனைத்துமே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிற வைத்து. இந்த படத்தை இவ்வாண்டு, ஜூலை 30 அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் திட்டமிட்டிருந்தனர்.

அடுத்ததாக ஆதிபுருஷ் படத்தில் நடிக்கவுள்ளார். இதன் படப்பிடிப்பு தொடங்க தாமதம் ஆவதால் அதற்க்கிடையில் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். 

கே.ஜி.எப் படங்களை இயக்கியதன் மூலம் பிரபலமானவர் பிரசாந்த் நீல். இவர் அடுத்ததாக பிரபாஸை வைத்து ‘சலார்’ என்ற படத்தை இயக்க உள்ளார். பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகும் இப்படத்தில் பிரபாசுக்கு ஜோடியாக சுருதிஹாசன் நடிக்கிறார். பிரபல கன்னட நடிகர் மது குருசாமி, இப்படத்தில் வில்லனாக நடிக்கிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு ஜூலை மாதத்தில் தொடங்க உள்ளதாம். மேலும் இப்படத்தில் ஒரே மாதத்தில் நடித்து முடிக்க பிரபாஸ் திட்டமிட்டுள்ளாராம். ஆகஸ்ட் மாதம் முதல் ஆதிபுருஷ் படத்தில் நடிக்க கால்ஷீட் கொடுத்திருப்பதால் அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த இரு படங்களும் பான்-இந்தியா படங்களாக தயாராகி வருவது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *