கமலின் விக்ரம் படத்தில் இணையும் மேலும் ஒரு நாயகன்!!!
| | |

கமலின் விக்ரம் படத்தில் இணையும் மேலும் ஒரு நாயகன்!!!

Spread the love

கைதி மற்றும் மாஸ்டர் படங்களின் வெற்றிக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கும் விக்ரம் படத்தில் கமல் நாயகனாக நடிக்கிறார். இப்படத்தின் முக்கிய பாத்திரத்தில் விஐய் சேதுபதி, பகத் பாசில், அர்ஜுன் தாஸ் மற்றும் நரேன் நடிக்கிறார்கள். இதில் ஏற்கனவே கைதி படத்தில் முக்கிய பாத்திரத்தில் நரேன் நடித்திருந்தார். 

சமிபத்தில் நரேன் அளித்த பேட்டியில், கமலின் நடிப்பை பார்த்து, சினிமாவிற்கு வந்தவர்களில் நானும் ஒருவன். நான் மட்டுமின்றி, இயக்குனரும் கமலுடைய பெரிய ரசிகர்கள். இன்று அவருடன் நான் நடிக்கப் போகிறேன் என்பது கனவு போல் உள்ளது. கைதிக்கு பின் இரண்டு படம் முடியும் தருவாயில் உள்ளது. நல்ல கதைகள் கிடைப்பது கடினமாக இருக்கிறது. அதனால் ஒவ்வொரு படத்திற்கும் இடைவேளை அதிகரிக்கிறது. 

கைதிக்கு பின் நான் நடித்து வரும் படத்தில் ஆட்டிஸம் பாதித்த நபராக நடித்து வருகிறேன். வித்தியாசமான பாத்திரம். நடிப்பது சவாலாக இருந்தது. மற்றொரு படம் தமிழ், மலையாளம் இரண்டிலும் உருவாகிறது. கதிர், நட்டி நட்ராஜ், கயல்ஆனந்தி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விரைவில் இரண்டு படங்களும் வெளியாக உள்ளன. 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *