ஓ.டி.டிக்கு செல்லும் புதிய படங்கள்!!!
| |

ஓ.டி.டிக்கு செல்லும் புதிய படங்கள்!!!

Spread the love

கொரோன இரண்டாவது அலை பரவல் காரணமாக தியேட்டர்கள் மூடப்பட்டு உள்ளன. இந்த சூழ்நிலையில் படங்களை தயாரித்து வைத்துள்ள தயாரிப்பாளர்கள் தங்கள் முதலீடு முடங்கி உள்ளதால் வருத்தத்தில் உள்ளனர். 

தியேட்டர்கள் திறக்கப்பட இன்னும் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் ஆகலாம் என்ற சூழ்நிலை தற்போது நிலவுகிறது. அப்படியே தியேட்டர்கள் திறக்க பட்டாலும் மக்கள் திரையரங்குக்கு வருவார்களா என்பது மிகப்பெரிய கேள்விக்குறி. கொரோன பரவல் குறைந்து, அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்பட்ட பின்னரே தியேட்டருக்கு மக்கள் வருவார்கள் என்பது பலரின் கருத்தாக உள்ளது.

கொரோன முதல் அலைலில் தியேட்டர்கள் மூடப்பட்டு இருந்த போது, ஜோதிகா நடித்த பொன்மகள் வந்தாள் படம் மே மாதம் இறுதியில் ஓ.டி.டி தளத்தில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதைத் தொடர்ந்து பல படங்கள் ஓ.டி.டி தளத்தில் நேரடியாக வெளியிடப்பட்டது. கடந்த ஆண்டு மட்டும், டிசம்பர் முடிய 20 படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியிடப்பட்டன.

இந்த ஆண்டு தொடக்கம் முதல் பல படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியாகின. அவற்றில் சில படங்கள் மட்டுமே மக்களிடையே வரவேற்பை பெற்றது.

மீண்டும் கொரோன ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது நிலையில் ஓ.டி.டி தளத்தில் பல படங்கள் வெளியாகும் என்று மக்களால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடந்த வாரம் ஒரே ஒரு படம் மட்டும் வெளியானது.

இந்தநிலையில் வரும் நாட்களில் பல படங்கள் ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது. மேலும் சில பாடங்களுக்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது, அவற்றில் சில படங்கள் சிக்கல்களால் வெளியீட்டுக்கான முடிவு எடுப்பதில் கால தாமதம் ஏற்பட்டுள்ளது. ஓ.டி.டி தளத்தில் வெளியாகும் மற்றும் வெளியாக வாய்ப்புள்ள படங்களை கீழே காணலாம்.

சுமோ

துக்ளக் தர்பார்

நெற்றிக்கண் 

லாபம் 

ராக்கி

கடைசி விவசாயி

வாழ்

டாக்டர் 

மாமனிதன்

யாதும் ஊரே யாவரும் கேளிர்

நரகாசுரன் 

பார்டர் 

முருங்கைக்காய் சிப்ஸ்

ராக்கி 

பன்னிகுட்டி 

ஐங்கரன் 

மஹா

பிரண்ட்ஷிப் 

எஃப் ஐ ஆர்

விக்டின்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *