ஊர் சுற்றி போலீஸ் மாற்றிய நட்சத்திர காதல் ஜோடி
| |

ஊர் சுற்றி போலீஸ் மாற்றிய நட்சத்திர காதல் ஜோடி

Spread the love

பாலிவுட் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் நடிகர் டைகர் ஷெராப், திஷா பதானி.  டைகர் ஷெராப், திஷா பதானி இருவரும் காதலிப்பது அனைவரும் அறிந்ததே ஒன்று.

கொரோன பரவல் காரணமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் ஜூன் 15-ஆம் தேதி வரை ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. காலை 7 மணி முதல் மதியம் 2 மணி வரை அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே மக்கள் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுகின்றனர். மதியம் 2 மணிக்கு மேல் எந்தக் காரணமும் இல்லாமல் மக்கள் வெளியே வரக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த நிலையில் காதல் ஜோடிகளான டைகர் ஷெராப், திஷா பதானி இருவரும் மும்பையில் 2 மணிக்கு மேல் ஊர் சுற்றி இருக்கிறார்கள். அப்போது போலீசார் அவர்களிடம் விசாரித்தபோது சரியான காரணத்தை அவர்கள் கூறவில்லை. அதனால் அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து எப்ஐஆர் போடப்பட்டிருக்கிறது. இந்த விவகாரம் பாலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 

இதற்கு முன் இந்தி நடிகர் விவேக் ஓப்ராய் மாஸ் போடாமல் வெளியே வந்தார் என்ற காரணத்திற்காக போலீசார் அவர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *