இந்திக்கு செல்லும் விஜய்யின் மாஸ்டர் படம்!!!
| | |

இந்திக்கு செல்லும் விஜய்யின் மாஸ்டர் படம்!!!

Spread the love

நடிகர் விஜய் நடித்து இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையில் வெளியாகி படம் மாஸ்டர். கொரோனா பரவளையும் இந்த படம் நல்ல வரவேற்பை பெற்றது. இதில் நாயகியாக மாளவிகா மோகனன், வில்லனாக விஜய்சேதுபதி மற்றும் சாந்தனு, அர்ஜுன்தாஸ், கவுரி கிஷன் உள்ளிட்ட பலர் நடித்து இருந்தனர். லோகேஷ் கனகராஜ் இயக்கினார்.

விஜய்

இந்த படம் தெலுங்கு, இந்தி மொழிகளிலும் டப்பிங் செய்து வெளியிடப்பட்டது. படம் நல்ல வசூல் குவித்தது. இதை பார்த்து இந்தியில்   மாஸ்டர் படத்தை ரீமேக் செய்யும் உரிமையை பெரிய விலை கொடுத்து வாங்கினர். இந்தியில் மாஸ்டர் படத்துக்கு திரைக்கதை வசனம் எழுதும் பணிகள் நடந்து தற்போது அது இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.

விஜய்யின் மாஸ்டர் ரீமேக்கில் இருந்து விலகிய பிரபல நடிகர்?

மாஸ்டர் இந்தி ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் நடிக்கப்போவது யார் என்ற எதிர்பார்ப்பு நிலவியது. இந்த நிலையில் சல்மான்கானிடம் பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. சல்மான்கானுக்கு மாஸ்டர் படம் பிடித்துள்ளதால் விஜய் வேடத்தில் நடிக்க அவர் சம்மதிப்பார் என்று படக்குழுவினர் எதிர்பார்க்கின்றனர். விரைவில் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சல்மான் கான்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *