அவதார் 2 படத்தின் வெளியிட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த டிஸ்னி!!!
| | | |

அவதார் 2 படத்தின் வெளியிட்டு தேதியை அதிகாரப்பூர்வமாக அறிவித்த டிஸ்னி!!!

Spread the love

கடந்த 2009 ஆம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளிவந்த அவதார் படம் உலகையே திரும்பி பார்க்க வைத்தது. சுமார் ரூ.25 ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து உலக அளவில் அதிகம் வசூல் ஈட்டிய படம் என்ற சாதனையையும் நிகழ்த்தியுள்ளது. அவதார் படத்தில் இடம்பெற்ற கற்பனை உலகமும், கிராபிக்ஸ் தொழில்நுட்பங்களும் ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தின. 

அதனை தொடர்ந்து அவதார் படத்தின் 2ம் பாகம் தற்போது உருவாகிவருகிறது. இப்படம் டிசம்பர் 2021 வெளியாகும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. ஆனால், கொரோனா வைரஸ் தொற்றின் தாக்கம் காரணமாக தள்ளி வைக்கப்பட்டது. இந்நிலையில், அவதார் திரைப்படத்தின் இரண்டாம் பாகம் 2022-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 16-ஆம் தேதி வெளியாகும் என டிஸ்னி நிறுவனம் தற்போது அறிவித்துள்ளது.

மேலும் இதனை தொடர்ந்து அடுத்தடுத்த இரண்டு ஆண்டுகள் இடைவெளியில் படத்தின் அடுத்த நான்கு பாகங்களை வெளியிடவும் இந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இது அவதார் திரைப்பட ரசிகர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியையும் வரவேற்பையும் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *