அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் வெளியிட்டு தேதி வெளியானது?
| | | |

அஜித் நடித்து வரும் வலிமை படத்தின் வெளியிட்டு தேதி வெளியானது?

Spread the love

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் வலிமை. இந்த படத்தை போனி கபூர் தயாரித்து வருகிறார். மேலும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ் ஷா, இசையமைப்பாளராக யுவன் சங்கர் ராஜா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். 

அஜித்

அஜித்துக்கு ஜோடியாக பாலிவுட் நடிகை ஹூமா குரேஷியும், வில்லனாக தெலுங்கு நடிகர் கார்த்திகேயாவும் நடிக்கின்றனர். வலிமை படத்தின் பெரும்பாலான படப்பிடிப்பு முடிந்துவிட்டது. கொரோனா ஊரடங்கு காரணமாக வலிமை திரைப்படத்தின் படப்பிடிப்பு முடங்கி இருந்த நிலையில் ஐதராபாத்தில் இணைப்புக் காட்சிகளுக்கான படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏறக்குறைய இரண்டு வருடங்களாக இந்த படம் பற்றி எந்தவித தகவலும் வெளியிடாமல் இருந்து வந்த படக்குழு தற்போது கடந்த ஜூலைமாதம்மோஷன் போஸ்டர், ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஆகியவற்றை ரிலீஸ் செய்தது.

வலிமை படத்திற்காக கடும் உடற்பயிற்சி செய்து உடல் எடையை அதிகளவில் குறைத்து நடிகர் அஜித் நடித்துள்ளார் என்றும், இந்த படம் நிச்சயம் தல அஜித்தை அடுத்த இடத்திற்கு கொண்டு செல்லும் படமாக இருக்கும் என்றும் நடிகை போனி கபூர் கூறியுள்ளர்.

இதற்கிடையில் வலிமை படத்தை கிறிஸ்துமஸுக்கு திரைக்கு கொண்டு வர படக்குழு திட்டமிட்டுள்ளது. விரைவில் ரிலீஸ் தேதியை அறிவிக்க உள்ளனர். 

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *